ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தனியார் மஹாலில் வலசை பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் சேசு ராஜா நடைபெற்ற மீனவர் ஆலோசனை கூட்டத்தில் தகவல். இது குறித்து அவர் தெரிவித்திருப்பது வயிற்று பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை அண்மையில் கைது செய்து படகு ஓட்டுனருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு மீனவர்களுக்கு ஒரு வருட தண்டனையும் மற்றும் ஒரு மீனவருக்கு இரண்டு வருட தண்டனையும் இலங்கை நீதிமன்றம் வழங்கி உள்ளது. இந்தத் தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்ரவரி 17 முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு படகுகளில் கருப்பு கொடி கட்டி மத்திய மாநில அரசுகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் 3500 பேர் கலந்து கொள்ளும் கட்ச தீவு திருப்பயணத்தையும் மீனவர்கள் செல்லாமல் ரத்து செய்துள்ளதாகவும் இந்த சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படை இல்லாமல் பிப்ரவரி 22ஆம் தேதி காலை 11 மணியளவில் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு விசைப்படகு ஓட்டுனருக்கு ஆறு மாத கால சிறை தண்டனை விதித்துள்ளது. மீனவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். வயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவனுக்கு இது போன்ற கொடூர தண்டனை எந்த நாட்டிலும் இல்லை எனவே உடனடியாக மத்திய அரசாங்கம் தலையிட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்து தர வேண்டும் என்றனர். அதேபோல இலங்கை அரசு எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி கைது செய்யப்படும் விசைப்படகு ஓட்டுனர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனையும் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட சிறை தண்டனை வழங்குகிறது இந்த புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வருகிற சனிக்கிழமை யிலிருந்து மீனவர்களை மீட்டுக் கொண்டு வரும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் நடத்த உள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜா தங்கச்சி மடத்தில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 6:00 மணி அளவில் நடைபெற்ற மீனவர் ஆலோசனைக் கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி தெரிவித்துள்ளார்.







Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









