இராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி 1985-86-ம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர் அமைப்பான விழுதுகள் அறக்கட்டளை சார்பில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தலைமை வகித்து, கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார். உதவி தலைமை ஆசிரியர் சுந்தர் வரவேற்றார். விழுதுகள் அறக்கட்டளை தலைவர் மோகன் விளக்கவுரை ஆற்றினார். வட்டாட்சியர் அப்துல்ஜபார், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கருணாகரன், வர்த்தக சங்க செயலாளர் சந்திரன், தாய் தமிழ் அறக்கட்டளை நிர்வாகி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்கள் ஜெயகாந்தன், தினகரன், கராத்தா பழனிச்சாமி, விழுதுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் உமாநாத், துரைராஜ், உமாசங்கர், முனியசாமி மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.


You must be logged in to post a comment.