ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளி வளாகத்தில் (விவித சன்ஸ்க்ரிதி) என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா தலைமையில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ,மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்வள விஞ்ஞானி மரு. ராஜ் சரவணன்
ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
விழாவில் தேசியம், தெய்வீகம்,
கலாச்சாரம், பரத நாட்டியம் ,பல மாநிலங்களின் புகழ்பெற்ற நடனங்கள், நாட்டுப்புறப்பாடல், , இயற்கை, விவசாயம், போன்ற தலைப்பில் நடனங்கள் , கண்கவர் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கலந்து கொண்டு நடனமாடினர். அதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகளை வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் கேடயமற்ற நற்சான்றிதழ் வழங்கினார்.
இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பொதுமக்கள் சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்..



You must be logged in to post a comment.