ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.545 கோடி மதிப்பில் கட்டி முடித்த செங்குத்து தூக்கு புதிய ரயில் பாலம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் பாம்பன் பழைய ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேஸ்வரத்திற்கு 2022 டிச 23 முதல் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் பயணிகளை மண்டபம் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய மதுரை ரயில் நிலையத்திற்கு கடந்த 2 ஆண்டுளுக்கும் மேலாக சென்று வந்த ன. இந்நிலையில் பாம்பன் புதிய ரயில் பால பணிகள் முற்றிலும் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து கன்னியாகுமரி அதி விரைவு ரயில், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுத்தம் செய்ய மண்டபம் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு பயணிகள் இன்றி ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு வந்து பெட்டிகளை சுத்தம் செய்யப்பட்டு மண்டபம் ரயில் நிலையத்திற்கு மீண்டும்
செல்லும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் அறிவித்தது.
இதன் படி இன்று காலை 5:45 மணி அளவில் பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் காலி பெட்டிகளுடன் பயணிகள் இன்றி ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.
You must be logged in to post a comment.