இராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகச் சீர்கேடு, அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், மருந்துகள் இல்லாததை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் கே.ராஜூ எம்எல்ஏ தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தார்.
நகர் செயலாளர் அர்ஜுனன் வரவேற்றார்.
அமைப்பு செயலாளர் அன்வர்ராஜா (முன்னாள் அமைச்சர்), மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி ( பரமக்குடி நகராட்சி முன்னாள் தலைவர்), மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார் (ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் (பொ), துணைத்தலைவர்), அம்மா பேரவை இணைச்செயலாளர் சதன் பிரபாகர் (முன்னாள் எம்எல்ஏ), அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் மலேசியா பாண்டி (முன்னாள் எம்எல்ஏ) நிறைகுலத்தான் (முன்னாள் எம்பி), அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் சுந்தர பாண்டியன், ரெத்தினம், சாமிநாதன், மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார், போக்குவரத்து பிரிவு இணை செயலாளர் ரெத்தினம்,
விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார்,
தொழிற்சங்க மண்டல செயலாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் குமரவேல், மாவட்ட துணை செயலாளர்கள் பாதுஷா, பாலாமணி மாரி, மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன், மண்டபம் நகர் செயலாளர் சீமான் மரைக்காயர் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
You must be logged in to post a comment.