ராமேஸ்வரம் மீனவர் 23 பேரை, 2 படகுடன்சிறைபிடித்த இலங்கை கடற்படை..

ராமேஸ்வரம் மீனவர் 23 பேரை, 2 படகுடன் சிறைபிடித்த இலங்கை கடற்படை..

ராமேஸ்வரம் மீன்பிடி தங்குதளத்தில் 492 விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றன. பகல் பொழுதில் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்த படகுகளில் 2 விசைப்படகு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற் படையினர் 2 படகுகளை சுற்றி வளைத்தனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவரது படகில் தொழிலுக்குச் சென்ற ராபர்ட், ஜான்சன், சாமுவேல், லெனின், கேபா, ரஞ்சித், லிஸ்டன், லவுசன், இளங்கோ, ஆசோன், சாமுவேல், மெல்சன், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது படகில் தொழிலுக்குச் சென்ற பெக்கர்(எ) ஜான் பிரிட்டோ, மார்ட்டின் மணி, சிதம்பரம், ஆரோன், டைமன் பிரபாகரன், சதீஷ், சுபாஷ் சந்திரபோஸ், சூசை, இன்னோசன். அருளானந்த பாஸ்கர், ஆக்லஸ் என 23 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசன் துறை கடற்படை முகாம் கொண்டு சென்று விசாரிக்கின்றனர். இதன் பின்னர் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!