இலங்கைச் சிறையில் உள்ள மூன்று மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தம் ! கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு !!வேலை நிறுத்தம் தொடரும் !!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் மூன்று நாள் தொடர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் படகு உரிமம், அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை ஒப்படைக்க போவதாக 11 கிலோ மீட்டர் தூரம் நடந்து பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இலங்கை நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பதாகவும் விரைவில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய மத்திய மாநில அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் உறுதியளித்தார். இந்த உறுதியை ஏற்ற மீனவர்கள் தங்களது நடை பயணத்தை ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மீனவர்களை விடுதலை செய்யும் வரை மீனவர் ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேருக்கு வரும் 22ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளதை அடுத்து மீனவர்கள் அனைவரும் நிபந்தனைகள் இல்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் விடுவிக்கப்படாவிட்டால் மீனவர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நடை பயணம் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தொடரும் என தெரிவித்தனர். மீனவர்களின் நடை பயணம் காரணமாக மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் நடை பயணம் செல்லும் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தாமல் இருப்பதற்காக ராமேஸ்வரம் மரைன் காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மரைன் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!