ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தலைமையில் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக இதுவரை தமிழக முதல்வர் 35 கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பியும் எந்த பலனும் இல்லை என்றும் மீனவர்கள் மீது அக்கறை இல்லாத பாஜக அரசு 2024 வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் கோசமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்எஸ் பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ஒரு மாதத்தில் இலங்கை கடற்படையால் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மட்டுமே இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரமான பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகுகள் இலங்கை அரசுடைமையாக்கபட்டு வருவதை கண்டித்தும், இலங்கை அரசின் கைது நடவடிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் காத்து வருவதை கண்டித்தும் மீனவர் கைது தொடர்பாக இதுவரை 35 முறை மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் எந்த விதமான நடவடிக்கை இதுவரை எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது என்றும் தெரிவித்தார். மாவட்ட திமுக கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றியம் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.