உலகில் அமைதி நிலவவும், இந்தியாவில் நல்லாட்சி மலரவும் இந்நன்னாளில் இறைவனை பிரார்த்திக்கிறேன், “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” குழுமத்தின் ஆசிரியர் ரமலான் வாழ்த்து..

தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்நிலையில், கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உலகில் அமைதி நிலவவும் இந்தியாவில் நல்லாட்சி மலரவும் இந்நன்னாளில் இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!