வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்திதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

கியான்வாபி பள்ளிவாசலின் கீழ்த்தளத்தில் பூஜை செய்து கொள்ள சங் பரிவார் சக்திகளுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பு இஸ்லாமியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய தரப்பிடமிருந்து பாபர் மசூதி பறித்தது போன்று காசி, மதுராவில் உள்ள பள்ளிவாசல்களை பறிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல், சட்டரீதியாக சங் பரிவார் சக்திகள் முன்னெடுத்து வருகின்றன. இந்திய நாடு சுதந்திரம் பெறும் போது வழிபாட்டுத்தலங்கள் எவ்வாறு இருந்தனவோ அவை அப்படியே தொடர 1991 ஆம் ஆண்டில் கொண்டு வந்த வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டம் உத்ரவாதம் அளித்தது. ஆனால் மாறுபட்ட நடவடிக்கைகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது, ஜனநாயகம், சட்ட நெறிமுறைகளை குழி தோண்டி புதைக்கப்படும் இக்கால கட்டத்தில் அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணி மனை அருகே இன்று ஆர்பாட்டம் நடந்தது.

மாவட்டத்தலைவர் ஐ.எஸ். இப்ராஹிம் சாபிர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் பேசினார். இராமநாதபுரம் தெற்கு மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணை செயலாளர்கள் உஸ்மான், மீரான், பாருக் மற்றும் அனைத்துகிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் (தெற்கு) மாவட்ட செயலாளர் எம்.தினாஜ் கான் நன்றி கூறினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!