ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் வருகை ! அரசின் மெத்தன போக்கு தான் கள்ளச்சாராயம் உயிரிழப்புக்கு காரணம் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு !!

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 21 எஸ் டி பி ஐ கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக எஸ் டி பி ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் வருகை புரிந்தார். மேலும் சமீபத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவித் தொகையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பெரியபட்டினம், மரைக்காயர் பட்டினம், மண்டபம், பாம்பன், நம்புதலை, திருப்புல்லாணி இராமநாதபுரம் நகர் உட்பட பல்வேறு இடங்களில் கட்சியின் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது, கள்ளகுறிச்சியில் கள்ள சாராயத்திற்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் முதல் அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் , கஞ்சா, சாராயம் உளிட்ட போதை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் உட்பட அனைவரையும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் , சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்ப்படுத்தும் விதமாக பதிவிடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாம்பன் பகுதியில் கடலில் இறந்த சிறுவனுக்கு அரசு உடனடியாக நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றும் , காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் கட்ட அரசு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி டாஸ்மார்க் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் மாநில செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜெமீலு நிஷா, சோமு , மாவட்ட துணைத் தலைவர் முகமது சுலைமான், மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் மாவட்ட செயலாளர் ஆசாத், நஜமுதீன் மாவட்ட பொருளாளர் ஹசன் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நவ்வர்ஸா, சையத் அலி, ராஜ்குமார் உமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம், மீனவர் அணி மாவட்ட தலைவர் பகுருதீன் பொறியாளர் அணி மாவட்ட தலைவர் ஷேக் ஜலால் , திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜ்குமார் செயலாளர் பீர் மொஹிதீன் , மண்டபம் மேற்கு ஒன்றிய தலைவர் சுலைமான் , செயலாளர் அன்வர் , மண்டபம் கிழக்கு ஒன்றிய தலைவர் சிராஜ் தீன் , திருவாடானை ஒன்றிய தலைவர் மஸ்ஜித் உட்பட நகர், கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!