ராமநாதபுரம் அருகே வழுதூர் அருளொளி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் பெருமான் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு ஆலய வளாகப் பகுதியில் உள்ள கிணற்றில் புனித நீர் எடுத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது ஒவ்வொரு அமாவாசை அன்று புனித நீர் எடுத்து அபிஷேகம் செய்து ஆன்மீக பக்தர்களுக்கு வழங்கினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம் ஆகவே ஆன்மீக முறைப்படி தீர்த்த கிணற்றுக்கு ஈஸ்வர சரவணன் முன்னிலையில் வழுதூர் கிராம பொதுமக்கள் மற்றும் அருளொளி மன்றத்தினர் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்திருந்தனர்கிணற்றுக்கு அபிஷேகம் செய்து புனித நீர் எடுத்து விநாயகர் பெருமானுக்கு அபிஷேகம் செய்த பின்பு புனித நீர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது

You must be logged in to post a comment.