ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் சாலையோர வியாபாரிகள் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இது தொடர்பாக எஸ் டி பி ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் வெளியிட்ட அறிக்கையில்
ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள் உள்ளிட்ட வியாபாரப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில் ஏற்றி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சியில் அரண்மனை, பாரதி நகர் கேணிக்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடை நடத்தி வரும் நிலையில் அதனை அப்புறப்படுத்தாத நகராட்சி நிர்வாகம் சின்னக் கடைப்பகுதி இஸ்லாமியர்கள் பெரும் பான்மையாக வசிக்கும் பகுதி என்பதால் இத்தகைய அராஜகத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ராமநாதபுரம் நகராட்சி மேற்கொண்ட இத்தகைய பகுபாடான அராஜக நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. நகராட்சியின் போக்கை கண்டித்து அங்குள்ள பொதுமக்களும் வியாபாரிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவை வழங்குவதோடு ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
–
You must be logged in to post a comment.