பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் குறிப்பாக, ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகமாகிவிட்டது; நவாஸ் கனி MP காட்டம்..
கடந்த காலங்களில் கைது செய்தால் மீனவர்களை விடுவித்து, படகுகளையும் கொடுத்து விடுவார்கள்;
ஆனால் தற்போது படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு வருகிறார்கள், அது அவர்களின் வாழ்வாதாரம்;
கடந்த காலங்களில் அவர்களுக்கு சிறை தண்டனை கிடையாது, தற்போது சிறை தண்டனை, அபராதம் விதிக்கிறார்கள் என்றால் இந்திய அரசு இதை
கண்டிக்கவில்லை;
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை
அரசைக் கண்டித்தால் நிச்சயம் கைது மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தடுக்கப்படும்;
இந்தியா சொல்வதை கேட்காத நிலையில் இலங்கை அரசு இல்லை, ஆனால் இந்திய அரசு அவர்களை வலியுறுத்துவதில்லை”
-மதுரை விமான நிலையத்தில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி பேட்டி
You must be logged in to post a comment.