ராமநாதபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகார்கள் ஆய்வு !

ராமநாதபுரம் அரண்மனை சுற்றியுள்ள கடைகள் மற்றும் பவுண்ட் கடை தெரு இடங்களில் உள்ள மாம்பழகுடன்கள் போன்றவைகளை மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்ப அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வின்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த மாம்பழங்களையும் வாழைப்பழங்களையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாதிரிக்காக எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் :நுகர்வோர்கள் மாம்பழங்களை வாங்கும் போது இயற்கையான வாசனை வருகின்ற பழங்களை வாங்க வேண்டும் என்றும், வெளியில் பழுத்து உள்ளே காயாக இருந்தால் அதனை வாங்க வேண்டாம் என்று தெரிவித்தனர். மேலும் செயற்கை முறையில் கல் வைத்த மாம்பழம் என்றால் அந்த மாம்பலத்தில் அங்கங்கு தீக்காயம் போல் கருப்பாக ஆக காணப்படும் என்றும் மாம்பழங்கள் ஒரே மாதிரியாக பழுத்திருந்தால் அந்தப் பழங்களில் செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் மாம்பழங்கள் கீழிருந்து மேலாகத்தான் பழுத்து இருக்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டு மாம்பழங்களை நுகர்வோர்கள் வாங்க வேண்டும் என்றனர். மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருப்பதாகாக சந்தேகம் இருந்தால் 9444042322 புகார் தெரிவிக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!