ராமநாதபுரத்தில் நேற்று ஒரே நாளில் அரசால் தடை செய்யப்பட்ட 800 கிலோ தேளி மீன்களை பறிமுதல் செய்து அதை அளித்த நிலையில் இன்று ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயகுமார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில வியாபாரிகள் லாப நோக்கில் நீண்ட நாட்களாக கெட்டுப்போன 20 கிலோ மீன்கள் விற்பனைக்கு இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை பினாயில் ஊற்றி அளித்தனர். அதனைத் தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது . மேலும் இதுபோன்ற முறைகேடான செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சோதனையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் , ஜெயராஜ் , தர்மர் , மீன்வள ஆய்வாளர் அபுதாஹிர் , மீன்வள சார்பு ஆய்வாளர் அய்யனார் , கடல் அமலாக பிரிவு சார்பு ஆய்வாளர் குருநாதன் , காவலர் காதர் இப்ராகிம் ,மீன்வள மேற்பார்வையாளர் நடேஷ் , சரத் உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.





You must be logged in to post a comment.