இந்தியப் பிரதமர் வருகின்ற ஏப்ரல் 06, 2025 அன்று இராமேஸ்வரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் (NH) செல்லும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் இராமேஸ்வரத்திற்கு வரும் வாகனங்கள் குறித்த நேரத்தில் அனுமதி கிடையாது என்றும் இராமேஸ்வரம் நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவசர சேவைகள் எதுவும் பாதிப்பு ஏற்படாது என்றும் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 06 ஆம் தேதி இராமேஸ்வரத்திற்குச் செல்லத் திட்டமிடும் அனைத்து சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரைகள் முடிந்த அளவு மாற்றுத் தேதியில் வருமாறும் மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறும் தெரிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment.