வாசன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.10 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை திறப்பு..

வாசன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.10 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை திறப்பு..

 இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம் தங்கச்சிமடம் யாகப்பா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக 2022-23 நிதி ஆண்டு
தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தை வாசன் எம்பி ஒதுக்கீடு செய்தார். இந்நிதியில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தை தமாகா வாசன் எம்பி அறிவுறுத்தல் படி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் வி.என்.
நாகேஸ்வரன் இன்று (ஜன.27) திறந்து வைத்தார். மண்டபம்
வட்டார வளர்ச்சி அலுவலர் மலை ராஜன், தங்கச்சிமடம் ஊராட்சி தலைவர் குயின் மேரி, முன்னிலை வகித்தனர். தமாகா இளைஞரணி மாவட்ட தலைவர் சிவ பாலகிருஷ்ணன் ,
மண்டபம் வட்டாரத்தலைவர்கள்
சுரேஷ் (கிழக்கு), ராஜேஸ்வரன் (மேற்கு), கீழநாகாச்சி கிளை தலைவர்
வெள்ளைச்சாமி, உச்சிப்புளி நகர் தலைவர் பட்டாணி, இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர்
சத்தீஸ்வரன், இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர்
பிரவீன், மதிமுக மீனவரணி மாவட்ட செயலாளர் பேட்ரிட், பரவர் குல சங்க நிர்வாகி சம்சன்,
மீனவர் சங்க நிர்வாகிகள் ஜேசு, எமரிட், சகாயம்,
யாகப்பா பள்ளி நிர்வாகிகள், தீவு பரதர் பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!