ராமநாதபுரம் பத்திரப் பதிவாளரை முற்றுகையிட்டு வாக்குவாதம் – அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் பரபரப்பு..

ராமநாதபுரம் பத்திரப் பதிவாளரை முற்றுகையிட்டு வாக்குவாதம் – அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் பரபரப்பு..

ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒருங்கிணைந்த கட்டடத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள 2 சார் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 150க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள கேணிக்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலம் விற்பனை தொடர்பாக பத்திரப்பதிவிற்கு
இன்று காலை
வந்த ஏராளமானோர் 2 மணி நேரத்திற்கு மேலாக காக்க வைக்கப்பட்டனர். இதனால் ஆவேசமடைந்த மக்கள், சார் பதிவாளர் கண்ணகியை முற்றுகையிட்டு கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சார் பதிவாளரின் அலட்சியப் போக்கை கண்டித்து அலுவலக நுழைவு வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தையை யடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தர்ணாவில் ஈடுபட்டோர் கூறுகையில், பத்திரப் பதிவுகளை தமாதப்படுத்தக் கூடாது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!