ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்..

ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்..

ராமநாதபுரம், ஜன.25 -இராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்), மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு (ஆண்கள் மட்டும்) பிப்.17 ல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பி, நல்ல உடற்தகுதி இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விருப்பமுள்ளோர், தங்களது மாற்றுச்சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 2 ஆகிய வற்றுடன் பிப்.17 ல் ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேரில் ஆஜராக வேண்டும். மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையோர பகுதியில் வசிக்கும் இளைஞர் தேர்வு செய்யப்படுவர். ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவு அலுவலகத்தில் பிப்.5 முதல் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பிப். 11 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!