மண்டபம் முகாம் அரசு மேல் நிலைப்பள்ளி ஆண்டு விழா..

மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஏ. மகேஸ்வரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.பூபதி, பள்ளி புரவலர், சைவ .சரவணன், பள்ளி மேலாண் குழு தலைவர் உமாமகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் எம்.ரமேஷ் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் அக்சல்யா ஆண்டறிக்கை வாசித்தார். கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்த மாணவர்களுக்கு பேரூராட்சி தலைவர் டி.ராஜா, வினாடி வினா போட்டியில் வென்ற மாணாக்கருக்கு கவுன்சிலர் கே.சம்பத் ராஜா ஆகியோர் பரிசு வழங்கினர். கடல் சார் ஆராய்ச்சி கூட மூத்த விஞ்ஞானி பீஜான்சன், பேங்க் ஆப் இந்தியா மேலாளர் கே.என். தாமோதரன் ஆகியோர் பேசினர். ஆசிரியர்கள் இருதய ஆரோக்யமேரி, கோகிலா, ஜெயக்குமார், உடற்கல்வி இயக்குநர் தமிழரசு, உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ஜெப்ரின் நன்றி கூறினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!