மறைந்த காவலர் குடும்பத்திற்குகாக்கி உதவும் கரங்கள் மூலம் ரூ.26.35 லட்சம் நிதி உதவி..

மறைந்த காவலர் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் ரூ.26.35 லட்சம் நிதி உதவி..

தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த காவலர்கள் 5,500 பேர் காக்கி உதவும் கரங்கள் எனும் டெலிகிராம் குழு இணைந்துள்ளனர். இக்குழு உறுப்பினர்களில் ஒருவர் முதல்நிலை காவலர் குணராஜா . சென்னை வளசரவாக்கம் போக்குவரத்து காவலராக பணியாற்றிய இவர் சமீபத்தில் இறந்தார். இவரது குடும்பத்திற்கு உதவ காக்கி உதவும் கரங்கள் மூலம் ரூ.26,35,650 வசூலிக்கப்பட்டது. இத்தொகையில் ரூ.23 லட்சத்தை குணராஜா மகள் யாசினி குணனிகா பெயரில் எல்ஐசியில் சேமிப்பு செய்த பத்திரம், எஞ்சிய தொகை ரூ.3,35,650 ஐ குணராஜாவின் மனைவி, தாயாருக்கு தலா ரூ. 1,67,825 க்கான காசோலையை ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ், குண ராஜாவின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!