இராமநாதபுரம் மீன் விற்பனை கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு: 42 கிலோ மீன்கள் அழிப்பு..
இராமநாதபுரம் மாவட்டத்தில் விற்கப்படும் மீன்கள் உயிர்ப்பு தன்மைக்காக ரசாயனப்பொருள் சேர்க்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்தன. இதன்படி ராமநாதபுரம் தேவிபட்டினம், பட்டணம்காத்தான் இசிஆர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் உள்ள மீன் விற்பனை கூடங்களில் ராமேஸ்வரம் நகர், மண்டபம் வட்டாரம், பரமக்குடி நகர், ராமநாதபுரம் நகர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் லிங்கவேல், கருணாநிதி, தர்மர் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கைப்பற்றிய அழுகிய நிலையில், சமைத்து உண்ண தகுதியற்ற 42 கிலோ மீன் வகைகளை பினாயில் ஊற்றி அழித்தனர். மீன்களை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய வியாபாரிகளிடம் அறிவுறுத்தினர். பொதுமக்கள் தாங்கள் வாங்கும் உணவு பொருட்கள், பண்டங்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருப்பின் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


You must be logged in to post a comment.