ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழுநோய்
ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்..
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ராமநாதபுரம் ஜாஸ் கல்வி நிறுவனத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் விழிப்புணர்வு முகாம். இன்று நடந்தது. துணை இயக்குனர் (தொழுநோய் மருத்துவம்) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பாத்திமா கல்வி அறக்கட்டளை சேர்மன் முஹமது சலாவுதீன் முன்னிலையில், மாணவ மாணவிகள் பரிசோதனை செய்து தொழுநோய் தொடர்பாக விழிப்புணர்வு பெற்றனர். மாவட்ட நலக்கல்வியாளர் முஹமது ரபீக், மேற்பார்வையாளர் பொன்னம்பலம், சுகாதார ஆய்வாளர்கள் நீதி தேவன், மாரி, கோபிநாத், ஜாஸ் கல்வி நிறுவன நிர்வாக ஆசிரியை புவனா, ஆசிரியர்கள் ஆனந்த்ராஜ், லட்சேஸ்வரி, நிறைமதி, மனோன்மணியம் , மற்றும் மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.
You must be logged in to post a comment.