பேரையூர் அருகே பறவைகளை வேட்டையாடிய தந்தை, மகன் கைது..

பேரையூர் அருகே பறவைகளை வேட்டையாடிய தந்தை, மகன் கைது..

இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதாவுக்கு  கிடைத்த தகவல் படி சாயல்குடி வனச்சரகர் ராஜசேகரன் தலைமையில் சாயல்குடி வனவர், முஹமது அயாஸ் அலி, வனக்காப்பாளர்கள் முத்துகருப்பன், தமிழ்ச்செல்வன் அடங்கிய குழு கமுதி – பேரையூர் சாலை அருகே பறவைகளை வேட்டையாடி உயிருடன் பிடித்து வைத்திருந்த 2 பேரை இன்று கைது செய்தனர். விசாரணையில் பரமக்குடி லீலாவதி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் 50, அவரது மகன் பழனிச்செல்வம் 26 என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து உயிருடன் இருந்த தாரா வாத்துகள் -17, உள்ளான்-4, வெண் கொக்கு -1 இரு சக்கர வாகனங்கள் -2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். குற்றத்தை ஒப்புக் கொண்ட இருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்த பறவைகளை சாயல்குடி இருவேலி கண்மாயில் பறக்க விடப்பட்டன. ராமநாதபுரம் வனச்சரகர் நித்ய கல்யாணி, வனவர்கள் அமுதரசு, பரக்கத் நிஷா, வனக்காப்பாளர் முருகேசன் ஆகியோர் ராமநாதபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த இளையராஜா 32 என்பவர் கானாங்கோழி 1, கொக்கு 1 ஆகியவற்றை வேட்டையாடி கையில் வைத்திருந்த போது கையும் களவுமாக பிடித்து ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

syed abdulla

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!