திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது நடவடிக்கை கோரி ராமநாதபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்..

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது நடவடிக்கை கோரி ராமநாதபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்..

 பட்டியலின பெண் மீது வன்கொடுமை தாக்குதலில் ஈடுபட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன், மருமகள் ஆகியோரிடம் நேர்மையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் பாரதி நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுக மாவட்ட செயலர் எம்ஏ முனியசாமி தலைமை வகித்தார். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் எம். அசோக்குமார் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் எம்.சாமிநாதன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சேது.பாலசிங்கம், தகவல் தொழில் நுட்ப அணி விருதுநகர் மண்டல செயலாளர் ஏ.சரவணக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.சுந்தரபாண்டின், பரமக்குடி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் டாக்டர் எஸ்.முத்தையா, என். சதன் பிரபாகர் ஆகியோர் பேசினர். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்ஜிமருதுபாண்டியன் , மகளிரணி இணை செயலாளர் கவிதா சசிகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.ஆனிமுத்து, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கே.இளையராஜா, இளைஞர் பாசறை மாவட்ட பொருளாளர் கு.ராமநாதன், ஒன்றிய மகளிரணி நிர்வாகி வி.விஜயலட்சுமி, மண்டபம் நகர் செயலாளர் கே எம் ஏ சீமான் மரைக்காயர், அதிமுக தலைமை கழக பேச்சாளர் மா. மைதீன், மண்டபம் ஒன்றிய அம்மா பேரவை பொருளாளர் எம்பிஏ ஞானம் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில் ராமநாதபுரம், சாயல்குடி, திருவாடானை வட்டாரங்களை சேர்ந்த மாற்று கட்சியினர் மாவட்ட செயலாளர் எம். ஏ முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!