வீட்டுமனையை பெயர் மாற்ற செய்யரூ.10 ஆயிரம் லஞ்சம்: வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மூவர் கைது..

வீட்டுமனையை பெயர் மாற்ற செய்ய
ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மூவர் கைது..


வீட்டு வசதி வாரியத்தில் வாங்கிய வீட்டு மனையை பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் உள்பட 3 பேரை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்
சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி கழனி குடியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது தந்தை இறந்து விட்டதால் அவரது பெயரிலான வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை தனது தாயார் பெயருக்கு பெயர் மாற்றம் செய்ய ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு பிரவீன் குமார்
பலமுறை
அலைந்தார். பெயர் மாற்றம் செய்து தர நிர்வாகப் பொறியாளர் ரவிச்சந்திரன் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் அதனை பதிவு எழுத்தர் பாண்டியராஜுடம் கொடுத்து விடுமாறு ஆலோசனை கூறினார். அவர் அங்கு ஒப்பந்த பணியாளரான ஓய்வு பெற்ற ஊழியர் பாலாமணியிடம் பணத்தை கொடுக்குமாறு கூறினார். ரூ.10 யிரம் பணத்தை லஞ்சமாக பாலாமணி இன்று மாலை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். இது தொடர்பான விசாரணையில் லஞ்சம் வாங்கியதை உறுதி செய்த போலீஸார் வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன், எழுத்தர் பாண்டியராஜ், ஒப்பந்த ஊழியர் பாலாமணி ஆகியோரை கைது செய்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!