கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் நாய்களை அப்புறப்படுத்த வலியுறுத்தல்..

கீழக்கரை   அருகே காஞ்சிரங்குடியில் நாய்களை அப்புறப்படுத்த வலியுறுத்தல்..

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று நடந்தது. ஒன்றியக் குழு தலைவர் புல்லாணி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், ராஜேஸ்வரி.(கி. ஊ), துணைத் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 81 தீர்மானங்கள் வாசித்து விவாதிக்கப்பட்டன. திருப்புல்லாணி வட்டாரத்தில் சிறுவர்களுக்கு எட்டும் தூரத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் உயர்த்தி கட்ட மின்வாரிய ஊழியாளர்கள் முன்வரவேண்டும். கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு பணியில் பாரபட்சம் காட்டாமல் சுகாதாரப் பணியாளர்கள் செயல்பட வேண்டும் என தலைவர் புல்லாணி பேசினார்: திருப்புல்லாணியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லை என கவுன்சிலர் கலாராணி புகார் தெரிவித்தார். பெரியபட்டணம் பேருந்து நிலையம் அருகே பழுதடைந்துள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் சமீபத்திய மழை வெள்ளத்தால் நெல் சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கவுன்சிலர் பைரோஸ் கான் வலியுறுத்தினார். மழை வெள்ளத்தால் விவசாயம் பாதித்தோருக்கு நிவாரணம் வழங்க கலெக்டர் பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி கூறினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி (கி.ஊ) நன்றி கூறினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!