இராமநாதபுரத்தில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம், ஜன.30 – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வைத்தார். காரைக்குடி மண்டல துணைத்தலைவர் மணிக்கண்ணு, நிர்வாகிகள் விஜயபாண்டி, சாத்தையா, மனோகரன் ஆகியோர் பேசினர் புறநகர் கிளை தலைவர் செந்தில்குமார், செயலாளர் போஸ் ஆகியோர் பேசினர் வரவு செலவுக்கான வித்தியாச தொகையை வழங்க வேண்டும். 93 மாத கால அகவிலைப்படி நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.15 வது ஊதியக்குழு ஒப்பந்த பேச்சு வார்த்தையை அரசு உடனே துவங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









