தமிழ்நாடு அரசுக்கு துரை வைகோ வேண்டுகோள் !  

ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக இளைஞரணி தலைவர் துரைவைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அந்த பேட்டியின் போது திமுக கூட்டணியில் மதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் சமூகமாக நடந்து வருவதாகவும் கடந்த தேர்தலில் ஒரு லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்கப்பட்டது என்றும் இந்த தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்போம் என்றும் தெரிவித்தார், தமிழ்நாடு அரசு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் விநியோகம் செய்யப்படுகிறது  பாமாயில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது அதற்கு பதிலாக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை வழங்கினால் நமது விவசாயிகளுக்கு உரிய உதவியாக இருக்கும். மத்தியில் ஆளும் பாஜகவை பொறுத்தவரை கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கொடுப்போம் என்றார்கள் அதையும் தரவில்லை டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது மத்திய அரசு அடக்கு முறையை கையாள்கிறது இது கடும் கண்டனத்துக்குரியது. பாஜக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவே முடியாத சூழல் நிலவி வருகிறது. வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுவது உறுதியாகும் தமிழகத்தை பொறுத்த வரை 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!