இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் !

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் 6 உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள், 7 அதிகாரிகள் மற்றும் லஞ்சம் வாங்க உறுதுணையாக இருந்த 3 புரோக்கர்கள் உட்பட. பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 நபர்கள் ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை வாங்கும் போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அதனை தொடர்ந்து புகார்களை கொடுத்த பொதுமக்களின் குறைகளை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி உடனே சரிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் தமிழ்நாடு முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.25,000/- மதிப்புள்ள பணத்தை பெறுவதற்கும், அதேபோல் தாயாரின் பெயரில் உள்ள வீட்டின் மேற்புறம் செல்லும் குறை மின் அழுத்த கம்பியை மாற்றி அமைப்பதற்காகவும், தனக்கு சொந்தமான மனையை வரன் முறைப்படுத்தவும், பட்டா மாறுதல் வேண்டி இரண்டு வருடங்களாக அலைந்து பட்டா கிடைக்காமல் இருந்தவருக்கும், சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி உடனே சரிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் யாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் புகார் கொடுக்க பொதுமக்கள் முன்வரவேண்டும் என்றும் , லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களை கொடுக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் , அவர்களின் குறைகள் உடனே தீர்த்து வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ புகார்களை கீழ்க்கண்ட இராமநாதபுரம் டி.எஸ்.பி மற்றும் ஆய்வாளர் தொலைபேசி எண்கள் 9498215697, 9498652169 , 9498188390, 9498652166, 9600082798, 9498652167 , காவல் துணைக் கணகாணிப்பாளர் அலுவலகம்04567-230036 மின்அஞ்சல் : E-Mail [email protected] இதன் மூலம் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!