ராமநாதபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு உரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை யுபிஎஸ்சி தலைவர் எதற்காக ராஜினாமா செய்திருக்கிறார் அவர் பதவியேற்று ஓராண்டு கூட ஆகவில்லை அவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்பது தெரிய வேண்டும். தேர்வாணையங்களை ஊழல் மிகுந்ததாக பாஜக அரசு மாற்றி விட்டது. இதனை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் பாஜகவை சேர்ந்த கிரிராஜ் சிங் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியிருக்கிறார் அது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். தமிழகத்தில் பல்வேறு கொலைகள் நடந்து வருகின்றன சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றியும் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு இதனை கட்டுப்படுத்த வேண்டும் இவற்றை நியாயப்படுத்த முடியாது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும் உளவுத்துறையை பலப்படுத்த வேண்டும் நவீனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் முதலமைச்சரை வலியுறுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

You must be logged in to post a comment.