இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ! 220 மனுக்கள் பெற்று மனுக்களை விசாரணை செய்த ஆட்சியர் !!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 220 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.அதனை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 இலட்சம் வீதம் 3 பயனாளிகளுக்கு இயற்கை நிவாரண உதவித் தொகையினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 08 பயனாளிகளுக்கு ரூ.86,280/- மதிப்பீட்டில் காதொலிக்கருவி மற்றும் திறன் பேசி கருவிகளையும் வழங்கியதுடன், கூட்டுறவுத்துறையின் மூலம் 01 பயனாளிக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளின் நிதி ஆதாரத்திட்டத்திற்கான புதிய வங்கி கணக்கு சேவைக்கான பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டார். பின்னர் பள்ளி கல்வித்துறையின் மூலம் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் கல்வி பெற்றவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மொகத் இர்பான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனலெட்சுமி , மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!