இராமநாதபுரத்தில் குடிபோதையில் கன்னாபின்னாவென்று கார் ஓட்டிய நபர் ! காரை மறித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் !!

இராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை பகுதியில் இருந்து காரை ஓட்டிக்கொண்டு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ஜெகன் தியேட்டர் வழியாக கேணிக்கரை பகுதி வரை வரும் வழி நெடுகிலும் பல இருசக்கர வாகனங்களை மோதி தள்ளிவிட்டு புதுவலசை பகுதியை சேர்ந்தவர் சாதிக் ரகுமான் என்பவர் கடுமையான குடிபோதையில் வந்துள்ளார் . இவரது கார் வந்த நிலையைப் பார்த்து அந்த பகுதியில் சென்ற பொது மக்கள் அனைவரும் சிதறி ஓடி உள்ளனர் இந்த நிலையில் கேணிக்கரை பகுதியில் காரை தாறுமாறாக ஓட்டி வந்த போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் காரை மறித்து காரில் இருந்த குடிபோதை வாலிபரை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்துள்ளனர் பத்துக்கு மேற்பட்டவர்கள் இவரை தாக்கியதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த போலீசார் ஓடி வந்து குடிபோதை வாலிபரை மீட்டு ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் அங்கு நடத்திய விசாரணையில் அவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதும் பலர் மீது வாகனத்தை மோதிவிட்டு சென்றதும் தெரிய வந்தது காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் வரை இவரது போதை தெளியாததால் போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!