ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.! மாவட்ட எஸ்பியின் சிறப்பு பாதுகாப்பு பணி !!

ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ராமேஸ்வரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம், தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் நிர்வாகிகள் இணைந்து ஆயிரக்கணக்கானோர் எழுச்சியுடன் திரண்டு பேரணியாக வெற்றிக் கோசமிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வேட்பாளர் ஜெயபெருமாளை அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரனை சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இப்பேரணியை மாவட்ட எஸ்பி சந்தீஷ் சிறந்த முறையில் பாதுகாப்புடன் வழிநடத்திச் சென்று வேட்பு மனு தாக்கல் முடியும் வரை செயல்பட்டது. மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு மக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!