இராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 7761 மாணவர்களும், 7931 மாணவிகளும் என மொத்தம் 15,692 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். இன்று வெளியிட்ட தேர்வு முடிவுகளின்படி 7372 மாணவர்களும், 7749 மாணவிகளும் என மொத்தம் 15,121 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 96.36% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 138 அரசு பள்ளிகளில் 64 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் 49 பள்ளிகளில் 17 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். 75 மெட்ரிக் பள்ளிகளில் 52 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளனர் .

You must be logged in to post a comment.