இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் நடந்தது.இக்கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம், ஊரகப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் செலவின விபரம், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், முழு சுகாதார இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல் சக்தி
அபியான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து கிராம பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம் மற்றும் வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்தும் வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயர் விவரங்களை உறுதிபடுத்துதல் தொடர்பான வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசியதாவது:சுதந்திர தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சிகளிலும் இன்றைய தினம் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகின்றது. ஊராட்சி அளவில்
செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், அரசு நலத்திட்டங்களின் கீழ் கிராம அளவில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து ஒப்புதல் பெறுதல், ஊராட்சி செலவினங்களை கணக்காய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பொதுமக்கள் முன்னிலையில் நடத்திடும் வகையில் இக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றது.மேதலோடை கிராமப் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சீரான குடிநீர் வழங்கிடவும், கிராமத்திலுள்ள பெரிய ஊரணியை தூர்வாரி சீரமைத்திடவும், கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். தமிழக முதல்வர் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய ஆயக்கட்டுதாரர் சங்க பிரதிநிதிகள் மூலம் கண்மாய் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய பணிகளில் கிராம பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது பங்களிப்பை வழங்கிட வேண்டும்.தமிழக முதல்வர் கிராமப் பகுதிகளிலுள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி ஆகியவற்றில் எவ்வித குறைபாடுமின்றி முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்டுள்ள வசதிகள் அனைத்தும் முழுமையாக செயல்படுத்திடும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம்
மற்றும் வீடு கட்டும் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார். பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு அடையாள அட்டை, 1 பயனாளிக்கு தென்னை மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எல்.சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக
உதவியாளர் (வேளாண்மை) எஸ்.சேக்அப்துல்லா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி,இராமநாதபுரம் வேளாண்மை வணிகக்குழு தலைவர் .ராஜாஉட்படதிருப்புல்லாணி
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கீழக்கரை வட்டாட்சியர், அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









