கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது., இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரக காவல்துறையினர் மற்றும் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.,உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய இந்த பேரணியை உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்., கவணம்பட்டி ரோடு, பேரையூர் ரோடு, தேனி ரோடு என உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று தேவர் சிலை அருகில் நிறைவுற்ற இந்த பேரணியில் போதை பழக்கங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,உசிலம்பட்டி காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.,

You must be logged in to post a comment.