விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், சர்வதேச மகளிர் தின சிறப்பு நடைபயிற்சி மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி மற்றும் ஜே.சி.ஐ. கிளப் இணைந்து, சர்வதேச மகளிர் தின சிறப்பு நடைபயிற்சி மற்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். விழிப்புணர்வு ஊர்வலத்தை, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் துவக்கி வைத்தார். எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் இருந்து, திருத்தங்கல் சாலை, மாநகராட்சி காமராஜர் பூங்கா, தேவர் சிலை, முருகன் கோவில் சாலை, பஜார், தேரடி வீதி, நான்கு ரதவீதிகளின் வழியாக மீண்டும் கல்லூரி வளாகம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலத்தில் உற்சாகமாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குநர் விஜயகுமாரி தலைமையில் பேராாசிரியர்கள் மற்றும் ஜே.சி.ஐ. கிளப் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









