தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டிசம்பர்.1 உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரேமலதா தலைமையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கூறும் போது, சமூகத்தோடு இணைந்து எய்ட்ஸ் நோய் உருவாகாமல் தடுப்பதோடு, இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் இணைந்து உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.மேலும், தென்காசி மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் மற்றும் பிரசவ அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எய்ட்ஸ் நோயாளர்களுக்கு அறுவை சிகிச்சைகள் மற்றும் அனைத்து சிகிச்சைகளும் செய்யப்படுகிறது என தெரிவித்தார். பொதுமக்கள் எய்ட்ஸ் நோயாளிகளை விலக்கி வைக்காமல், அவர்களை அரவணைத்து, அவர்களது முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இவ்விழாவில் மருத்துவமனை உறைவிட மருத்துவர் மரு. செல்வபாலா, ஏ.ஆர்.டி வட்டார மருத்துவ அதிகாரி மருத்துவர் விஜயகுமார் மற்றும் அனைத்துத் துறை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தென்காசி அரசு மருத்துவமனை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் செய்திருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!