இராமநாதபுரத்தில் ராஜிவ் காந்தி நினைவு தின ஊர்வலம்..

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 28வது நினைவு மவுன ஊர்வலம் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்தது. இராமநாதபுரம் மணிக்கூண்டு பகுதியில் ராஜிவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அரண்மனை முன் துவங்கிய மவுன ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் எம். தெய்வேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் எஸ்.எம். இதயத்துல்லா முன்னிலை வகித்தார்.

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ். பாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்வத்துரை அப்துல்லா, மாவட்ட தலைவர்கள் ஏ.எஸ்.விக்டர், ஜெ.ரமேஷ் பாபு, வழக்கறிஞர் அன்புச் செழியன், ஆர்ட் கணேசன், பாரி ராஜன், மாவட்ட செயலர்கள் எம்.பாலகிருஷ்ணன், சீனி சுகர்னோ, அஜ்மல் கான், முத்துவேல், மாவட்ட துணை தலைவர்கள் எம்.கே. முத்துகிருஷ்ணன், எஸ்.வி.கணேசன், மாவட்ட பொதுச் செயலர்கள் சேமனூர் ராஜேந்திரன், மோதிலால் நேரு, வட்டாரத் தலைவர் கள் எஸ்.பி.கோபால், கே.ஜோதிபாலன், எம்.ஜி.விஜய௹பன், சுப்ரமணியன், கோவிந்தன், போத்தி, கே.முனீஸ்வரன், என்.சேதுபாண்பியன், நகர் தலைவர்கள் எம்.ராஜாமணி, டி.எம் எஸ்.கோபி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறி ஞர் சரவண காந்தி, சேவா தள நிர்வாகி காருகுடி சேகர், சக்தி செயலி ஒருங்கிணைப்பாளர்கள் உத்ரவிங்கம், ஓ.ஏ.அருள், போஸ், பாண்டி, ஞானசேகரன், ரவி, பாபு, இதர பிற்பட்டோர் பிரிவு நிர்வாகி ஆசீர், நகர் காங்கிரஸ் கமிட்டி ஆர்.அழகு, செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். அரண்மனையில் தொடங்கிய ஊர்வலம், வண்டிக்காரத் தெரு, வழிவிடு முருகன் கோயில் வழியாக அண்ணா சிலை முன் நிறைவடைந்தது. அங்கு, அனைவரும் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!