சென்னை தலைமைச் செயலக G5 காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கே.எச் சாலை அருகே செல்லும்போது ஒரு வயதான பெண் தனியாக நின்று அழுது கொண்டிருந்திரிக்கிறார்.காவல் ஆய்வாளர் அருகில் சென்று விசாரித்தபோது அவரின் பெண்ணான ஷீலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனம் ஏதாவது கிடைக்குமா? என்று பார்க்க இங்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.உடனடியாக நம்மாழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு பனிக்குடம் உடைந்த நிலையில் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.உடனடியாக 108 க்கு கால் செய்து ஆம்புலன்ஸ் வர செய்துள்ளார். ஆனால் அந்தத் தெருவுக்குள் 108 ஆம்புலன்ஸ் வர இயலாத காரணத்தால் இவரது போலீஸ் வாகனத்தில் ஷீலாவை ஏற்றிக்கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று அங்கு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.மருத்துவமனையில் ஷீலாவுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. சரியான நேரத்தில் செய்த உதவிக்காக காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியை ஷீலாவின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் காவல் பாராட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் அவர்களை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது.இறைவனின் கருணை என்மீது உள்ள காரணங்களால் தான் இது போன்ற செயல்கள் நம்மால் செய்ய முடிகிறது இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சந்தோஷமாக கூறினார்.சத்தியப்பாதை இதழ் மற்றும் கீழை நியூஸ் குழுமத்தின் சார்பாக தங்களது மனிதாபிமான செயலுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது. ஜெ.அஸ்கர்


You must be logged in to post a comment.