வடமாநிலங்களில் நவராத்திரி விழா கோலாகலம்

தமிழகத்தில் தற்போது நவராத்திரி விழா தொடர்ந்து 9 நாள் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் வடமாநிலமான மத்திய பிரதேசம் மாநிலம் சிவனி மாவட்டம் பரஸ்காடு தாலுகாவில் நவராத்திரி விழா 9 நாளாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாயன் என்பவர் மத்தியபிரதேசத்தில் உள்ள பரஸ்காடு தாலுகாவில் துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவினை இவரது தலைமையில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நவராத்திரி விழாவில் 9 நாளாக துர்க்கையம்மனுக்கு காலை மாலை என இரண்டு நேரங்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. மேலும் அந்த பகுதி பெண்கள் 108 விளக்கு வைத்து பூஜைகளும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து விழாவின் இறுதி நாளில் பரஸ்காடு தாலுகாவில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக துர்க்கையம்மன் பக்தர்களுக்கு அருள் வழங்கி காட்சி தருவதாக கூறப்படுகிறது. அதற்கு பின் அருகே உள்ள பரக்காடு அணையில் துர்க்கையம்மனுக்கு மங்கள இசை முழங்க சிறப்பு பூஜைகளுடன் கடலில் கரைத்து விடுவர். இந்த விழாவிற்காக தாலுகா முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்து காணப்பட்டது.

ராஜஸ்தான் செய்தியாளா் ராஜேஷ் கண்ண்ன்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!