ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் பேரூராட்சி 10,11,12-ஆவது வார்டுகளில் முகமது கோயா தெரு, இக்பால் தெரு, குட்லுநகரில் சுமார்500கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால் இந்தப் பகுதி முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட இணைப்பு வழங்கப்பட்டும் அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி சரிவர கிடைப்பதில்லை. பேரூராட்சியில் முறையிட்டால் அவர்கள் அப்பகுதி மேடான பகுதியாக உள்ளதால் நீர்வரத்து சரிவர இருக்காது என்று காரணம் கூறுகிறார்கள். அதற்கு மாற்றாக இதே ஏரியாவில் அமைந்துள்ள ஒரு ஊரணிக்கு அருகில் ஆழ்குழாய் அமைத்து கொடுத்தார்கள். அது உப்புநீராக போனதால் குடிநீருக்கு பயன்படுத்த முடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். அதிலும் தற்போது கோடை காலமாக இருப்பதால் குடிநீருக்கும், மற்ற செலவுகளுக்கும் நீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். குடிநீர் தேக்கத் தொட்டி அமைத்து அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் வசதி செய்து தருமாறு SDPI கோரிக்கை விடுத்துள்ளனர்.





You must be logged in to post a comment.