ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள தர்கா நீரோடையில் சிக்கித் தவித்த மலைப்பாம்பு!! பத்திரமாக மீட்ட விலங்கு நல சமூக ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே உள்ளது படிக்காசி அம்மா தர்கா உள்ளது தொழுகைக்கு வரும் முஸ்லிம் மக்கள் தர்காவிற்கு அருகே ஓடும் இளந்தோப்பு நீரோடையில் முகம் கை, கால் சுத்தம் செய்து தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை தர்காவிற்கு தொழுகைக்கு வந்தவர்கள் முகம் கை கால் சுத்தம் செய்ய சென்ற பொழுது தண்ணீரில் மலைப்பாம்பு ஒன்று மீன்பிடி வலையில் சிக்கி தவித்துக் கொண்டிருந்ததை கண்டுள்ளனர்.
இதனை அடுத்து மலைப்பாம்பை அடித்து துன்புறுத்தது அதனை மீட்கும் பொருட்டு ராஜபாளையம் விலங்கு நல சமூக ஆர்வலர் பிரவீன் என்பவருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த விலங்கு நல சமூக ஆர்வலர் பிரவீன் ஓடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த பத்தடி நிள மலைப்பாம்பை பாம்பிற்கும் பொதுமக்களுக்கும் எந்தவித அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் பத்திரமாக மீட்டு ராஜபாளையம் வேட்டை தடுப்பு காவலர் மகேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.
மீட்கப்பட்ட மலை பாம்பினை ராஜபாளையம் வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விடுவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









