இராஜபாளையம் அருகே விளை நிலத்தில் கிடைத்த அபூர்வ கற்சிலை; ஆச்சிரியமாக பார்த்து வரும் பொது மக்கள்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே பெருமாள்பட்டி ஆவுடையாபுரம் பகுதியில் விளை நிலங்களில் தோண்டப்பட்ட போது கிடைத்த அபூர்வ சிலை, கிராம மக்கள் ஆச்சரியத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து வழிபாடு செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே பெருமாள்பட்டி ஆவுடையாபுரம் பகுதியில் கருப்பையா என்பவரின் விளைநிலத்தில் உழவு பணிக்காக தோண்டும்போது சுமார் 1200 ஆண்டுகள் பழமையான சுவாமி கற்சிலை ஒன்று கைகள் மட்டும் சேதமடைந்த நிலையில் கிடைத்துள்ளது.

இந்த சிலையானது எங்குமே காணாத வண்ணம் மான் வாகனத்தில் 5அடி உயரத்தில் அம்மன் சிலையாக அவதரித்து அபூர்வ சிலையாக காட்சி தருகின்றது. மேலும் சற்று தொலைவில் புதைந்த நிலையில் நந்தி சிலை ஒன்றும் காணப்படுகிறது.

இதனால் இந்தபகுதியில் முற்காலத்தில் கோவில் இருந்திருக்கலாம் எனவும் இயற்கை சீற்றத்தினால் பூமிக்கடியில் புதைந்து மறைந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை காண சுற்றுவட்டார பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆச்சரியத்துடன் வந்து மிக பழமையான சிலையை அலங்காரம் செய்து வணங்கி செல்கின்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!