மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிய கார்; நூலிழையில் உயிர்தப்பிய முன்னாள் அமைச்சர் மகன்..

முன்னாள் அமைச்சர் தமிழ் குடிமகனின் மூன்றாவது மகன் பாரி. இவர் மதுரை புதூர் டிஆர்ஓ காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவர் இன்று மதியம் தனது காரில் புதூரில் இருந்து திருப்பரங்குன்றம் தியாகராஜா கல்லூரி சென்றுள்ளார்.  மதுரையில் பெய்த கனமழையால் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதை முழுவதும் நீர் நிறைந்துள்ளது. தண்ணீர் இருப்பதை அறியாமல் பாரி காருடன் உள்ளே சென்றுள்ளார்.

இதில் கார் முற்றிலும் மூழ்கிய நிலையில் உடனடியாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் உதயகுமார்  தலைமையிலான ஆறு பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி நீரில் மூழ்கி இருந்த காரை பத்திரமாக மீட்டனர். கார் முழுவதுமாக நீரில் மூழ்காததால் முன்னாள் அமைச்சர் தமிழில் குடிமகன் பாரி நூலிழையில் உயிர்தப்பினார். கடந்த மாதமும் இதே போல் ஒரு உயர்ரக கார் இந்த சுரங்கப்பாதையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த சுரங்க பாதையில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் உயிர்பலி ஆவதற்கு முன் மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!