தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை துவங்குகிறது..

தென் மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் மழை துவங்கும் எனவும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர் மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக வரும் 24 மணி நேரத்தில்   தென் தமிழக மாவட்டங்களில் மழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இராம நாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்று முதல் குளிரும் பனிப்பொழிவின் தாக்கம் படிப்படியாக குறையும்.

 

தென் மாவட்டங்கள் முழுவதும் 4 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் சாரல் மழை தொடரும். ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன மழையை பொறுத்தவரை மாஞ்சோலை காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து குதிரைவெட்டி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். காவிரி டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை நாகப்பட்டினம், மயிலாடு துறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது பருவமழை காலம் அல்ல என்பதால் தென் தமிழகத்தில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு இல்லை. லேசான மிதமான மழை மட்டுமே பதிவாகும். இவ்வாறு தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!