ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அதிகளவில் கண்மாய்கள், ஊரணிகள் உள்ளன. நூறு ஏக்கருக்கு மேல் பாசன வசதி கொண்ட கண்மாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழும், அதற்கு கீழ் பாசனம் உள்ள சிறுகண்மாய்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பராமரிப்பிலும் இருந்து வருகின்றன.
இந்த பாசனக் கண்மாய்களுக்கு உட்பட்டு பல நூறு ஏக்கர் விவசாய விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக யெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பிவிட்டன. அவ்வாறு நிரம்பிய கண்மாய்களில் இருந்து வெளியேறும் நீர் கண்மாய்களை ஒட்டி உள்ள பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள இடங்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.