ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எட்டுக்குடி பாண்டுகுடி நகரிக்கத்தான் ஓரியூர் உட்பட 10 கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலையில் அமைந்துள்ள தரைப்பாலத்தில் பருவமழை காலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படும் இதனால் அவ்வழியில் வாகனங்கள் சொல்ல முடியாத நிலையில் உருவாகும்.
இந்தப் பாலத்தினால் மழைக்காலங்களில் கிராம மக்கள் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர் மேலும் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் மிகுந்த சிரமப்படுகின்றனர் மேலும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் தண்ணீர் வேகம் அதிகரித்து வருவதால் பாலம் வழிமறித்து நெடுஞ்சாலை துறையினர் எச்சரிக்கை படுக்கை வைத்துள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அப்பாலத்தின் மண்களை எடுத்து சோதனை செய்வதாக கூறி அதிகாரிகள் சென்றதாகவும் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கை கையாண்டு வருவதாகவும் பகுதி மக்கள் தெரிவித்துள்ளது.
ஐந்தாண்டு காலமாக மழைகாலங்களில் தரைப்பாலம் மழை நீர் சூழ்ந்து காணப்படும் இதனை அப்பகுதி கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கைகள் வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதி கிராம மக்கள் அடிப்படை தேவைகளுக்கும் செல்வதற்கு பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லக்கூடிய சூழல் நிலவி வருகிறது.
மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரைப்பாளத்தை விரைந்து உயர் பாலமாக கட்டி தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
You must be logged in to post a comment.